இந்தியா

சாம் பிட்ராடோ கருத்து துரதிர்ஷ்டவசமானது : நிதியமைச்சர் அருண்ஜேட்லி

இந்திய விமானப் படை தாக்குதல் தொடர்பாக,சாம் பிட்ராடோ கருத்து துரதிர்ஷ்டவசமானது என அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்

தந்தி டிவி
பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாம் மீதான இந்திய விமானப் படை தாக்குதல் தொடர்பாக, சாம் பிட்ராடோ தெரிவித்த கருத்து தொடர்பான கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சர் அருண்ஜேட்லி, பா.ஜ.க. என்ன செய்கிறதோ அது தவறு என அவர் நினைப்பதாக கூறினார்.டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலகில் எந்தவொரு நாடும், குறிப்பாக இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள் கூட அவர் தெரிவித்த கருத்தை தெரிவிக்காது என்று அருண்ஜேட்லி தெரிவித்தார்.பாகிஸ்தான் மட்டும் தான் இதுபோன்ற பார்வையை கொண்டிருக்க முடியும் என்றும், இத்தகைய நபர்கள் நமது நாட்டில் உள்ள அரசியல் கட்சி ஒன்றுக்கு ஆலோசகராக இருப்பது நமது துரதிர்ஷ்டம் என்றும் அருண்ஜேட்லி கருத்து தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்