இந்தியா

சுங்கச் சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அமைச்சர் மனைவி...

அமைச்சர் மனைவி பணம் செலுத்த மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி, சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தந்தி டிவி
சுங்கச் சாவடியில் பணம் செலுத்த மறுத்த ஆந்திர அமைச்சர் மனைவியின் கார், நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தெலுங்கு தேசம் கட்சி அமைச்சரான ப்ரதிபதி புல்லா ரெட்டியின் மனைவி, மங்களகிரி பகுதியில் உள்ள காஸா சுங்கச்சாவடியை கடந்த போது இந்த வாக்குவாதம் ஏற்பட்டது. அமைச்சரின் மனைவியின் காரையே மறிப்பதா என்று அவர் வாக்குவாதம் செய்தார். எம்.எல்.ஏ. ஸ்டிக்கரை காண்பித்தும், கார் விடுவிக்கப்படாத நிலையில், இறுதியாக பணம் செலுத்திவிட்டு அவர் அங்கிருந்து புறப்பட்டார். அமைச்சர் மனைவி பணம் செலுத்த மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி, சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை