இந்தியா

"கிராம வங்கிகளை தனியார்மயமாக்கும் திட்டமில்லை" - நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தகவல்

கிராமப்புற வங்கிகளை தனியார் மயமாக்கும் திட்டமில்லை என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கூறினார்.

தந்தி டிவி
கிராமப்புற வங்கிகளை தனியார் மயமாக்கும் திட்டமில்லை என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கூறினார். மக்களவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு எழுத்துபூர்வ பதிலளித்த அவர், பிராந்திய கிராமப்புற வங்கிகளை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை என்று தெளிவுபடுத்தினார். மாநிலத்துக்குள் இருக்கும் கிராமப்புற வங்கிகளை இணைப்பதன் மூலம் செலவைக் குறைத்து, தொழில்நுட்பத்தை மேம்படுத்த வழி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அந்த வங்கிகளின் செயல்பாடுகள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் பதிலளித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்