இந்தியா

யெஸ் வங்கி நிதி மோசடி விவகாரம் : ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானிக்கு சம்மன்

யெஸ் வங்கி நிதி மோசடி விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை அழைப்பு அனுப்பியுள்ளது.

தந்தி டிவி
வாராக்கடன் காரணமாக நிதி நெருக்கடியில் சிக்கியதால் யெஸ் வங்கி நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வங்கி தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளையும் ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து , பின்னர் தளர்த்திக் கொண்ட நிலையில் சட்ட விரோத பணப் பரிவர்த்தனை புகாரில் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரிடம் சி.பி.ஐ. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் யெஸ் வங்கி நிதி மோசடி விவகாரத்தில், விசாரணை நடத்த அனில் அம்பானிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்