இந்தியா

யெஸ் வங்கி நிதி மோசடி விவகாரம் - விசாரணைக்கு நேரில் ஆஜரான அனில் அம்பானி

யெஸ் வங்கி நிதி மோசடி விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானி நேரில் ஆஜரானார்.

தந்தி டிவி

யெஸ் வங்கி நிதி மோசடி விவகாரத்தில், அமலாக்கத்துறை விசாரணைக்கு ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானி நேரில் ஆஜரானார். யெஸ் வங்கியில், அந்த வங்கியின் நிறுவனர் ராணா கபூர் சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் செய்துள்ளதாக அமலாக்கத்துறை விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, விசாரணைக்கு நேரில் ஆஜராக பல்வேறு தொழில் நிறுவன தலைவர்களுக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த நிலையில், மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்