இந்தியா

வீட்டால் தாய்க்கு வந்த வினை... மகனே கரண்ட் ஷாக் வைத்த கொடுமை - ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர சம்பவம்

தந்தி டிவி

ஆந்திரா மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் சங்கராபுரம் கிராமத்தை சேர்ந்த லட்சுமிபாய் என்பவர், தனது கணவரின் இரண்டாவது மனைவியின் மகனான தத்து நாயக்கை சிறு வயது முதல் வளர்த்து வந்துள்ளார். தத்து நாயக், சரியாக படிக்காமல் வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றி வந்து இருக்கிறார். இதனிடையே லட்சுமிபாயுக்கு சொந்தமான வீட்டை தனக்கு எழுதி வைக்குமாறு தத்து நாயக் தொல்லை கொடுத்து இருக்கிறார். இதற்கு லட்சுமிபாய் மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த அவர், லட்சுமி பாயிற்கு கரண்ட் ஷாக் வைத்து கொடுமைப்படுத்தி இருக்கிறார். அப்போதும் லட்சுமிபாய் மறுத்ததால், ஆத்திரத்தில் இரும்பு கம்பியால் அடித்தே கொலை செய்துள்ளார். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தத்து நாயக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு