இந்தியா

மக்களை நாள்தோறும் சந்தித்து குறைகேட்கும் திட்டம் : பிரஜா தர்பார் திட்டம் இன்று மீண்டும் தொடங்குகிறது

மக்களை நாள்தோறும் சந்தித்து குறைகேட்கும் திட்டத்தை ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று தொடங்குகிறார்.

தந்தி டிவி
மக்களை நாள்தோறும் சந்தித்து குறைகேட்கும் திட்டத்தை ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று தொடங்குகிறார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஒய். எஸ். ராஜசேகர் ரெட்டி தனது ஆட்சிக்காலத்தில் பிரஜா தர்பார் என்ற பெயரில் மக்களுக்கு குறைதீர்க்கும் கூட்டத்தை ஐதராபாத்தில் நடத்தி வந்தார். அப்பாவுக்கு தப்பாத பிள்ளையாக அவரின் வழியை பின் தொடரும் ஜெகன்மோகன் ரெட்டி இன்று முதல் மக்கள் குறைதீர் கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளார். அமராவதி மாவட்டம் தடப்பள்ளியில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் நாள்தோறும் காலை 8 மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரம் பிரஜா தர்பார் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் மனுக்களை நேரடியாக முதலமைச்சரிடம் வழங்கலாம்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்