இந்தியா

ஆந்திராவில் போலீசாருக்கு வார விடுமுறை, இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது

ஆந்திர போலீசாருக்கு இன்று முதல் வார விடுமுறை அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திர கூடுதல் டிஜிபி ரவிசங்கர் அய்யனார் வார விடுமுறை தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு கமிட்டி மொத்தம் 19 விடுமுறை மாடல்களை தேர்ந்தெடுத்துள்ளதாக கூறினார். இதில் அந்தந்த பகுதியில் உள்ள அதிகாரிகள் ஏதாவது ஒரு மாடலை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார். காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரை உள்ள போ​லீசாருக்கு வார விடுமுறை வழங்கப்பட உள்ளதாகவும், வார விடுமுறை நாட்களில் சிப்ட் நடைமுறையில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். விசாகப்பட்டினம், கடப்பா, பிரகாசம் மாவட்டத்தில் சோதனை முறையில் வார விடுமுறை அமல்படுத்தப்பட்டு அங்குள்ள அதிகாரிகளிடம் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்