இந்தியா

மாவோயிஸ்ட் தாக்குதலில் உயிரிழந்த ஆந்திர எம்.எல்.ஏ. உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைப்பு

ஆந்திராவில் மா​வோயிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்ட எம்எல்ஏ-வின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

* ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. கிடாரி சர்வேஸ்வர ராவ், விசாகப்பட்டினத்தில் உள்ள அவரது தொகுதிக்கு நேற்று சென்றபோது மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

* இந்த தாக்குதலில், முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமாவும் உயிரிழந்தார். பெண்கள் உட்பட சுமார் 40 மாவோயிஸ்டுகள் கூட்டமாக வந்து இந்த தாக்குதலை நடத்தினர். அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

* இதற்கிடையே, அங்குள்ள தும்ரிகூடா காவல்நிலைய உதவி ஆய்வாளர் அம்மாராவ் சஸ்பெண்ம் செய்யப்பட்டுள்ளார்.

* இந்நிலையில், சர்வேஸ்வர ராவின் உடல், பிரேத பரிசோதனைக்கு பிறகு, இன்று காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், அரகு பகுதியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில், பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

* விசாகப்பட்டினம் மாவட்டம் பாடேரு பகுதியில் சர்வேஸ்வர ராவ், சிவேரி சோமா இருவரின் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன. இதற்கிடையே, விசாகப்பட்டினத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி