ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் ஜோனகிரி கிராமத்தை சேர்ந்தவர் லிங்கையா. இவருக்கு திருமணமாகி பத்து நாட்களே ஆகியிருக்கும் நிலையில், மனைவி நாகமணி தனக்கு விஷம் கலந்த மோரை கொடுத்துவிட்டதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த குற்றச்சாட்டை நாகமணி மறுத்த போதும், லிங்கையா குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்கள் நாகமணையை வசைபாடியுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், சிகிச்சைக்கு பின் லிங்கையாவிடம் நடத்திய விசாரணையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. லிங்கையா திருமணத்திற்கு முன் வேறொரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் பெற்றோர் நாகமணி என்ற பெண்ணுடன் திருமணம் செய்து வைத்ததால், அந்த பெண் மீது கொலை முயற்சி பழியை சுமத்தியுள்ளார் லிங்கையா... காதலியுடன் கை கோர்ப்பதற்காக திருமணமான பத்து நாளில் அப்பாவி மனைவி மீது கணவர் கொலைப்பழி சுமத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.