கரிகிரி மண்டலம் கொல்லம் கிராமத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், அரசுப்பள்ளியில் படிக்கும் 10 வயது சிறுமியை, வீரபத்திரன் என்பவர் பலாத்காரம் செய்ததோடு, கொலை செய்யவும் முயன்றுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு திரண்டு வந்த பொதுமக்கள், வீரபத்திரனுக்கு தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். அப்போது அவர் தப்பியோட முயன்றதால், ஆத்திரமடைந்த போலீசார் லத்தியால் சரமாரியாக தாக்கினர். தொடர்ந்து வீரபத்திரன் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.