இந்தியா

"தங்கை மீது பெற்றோர் காண்பித்த பாசத்தை பார்த்து சிறுமிக்கு தலைக்கேறிய கோபம் : சிறுமி விபரீத முடிவு"

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் 5 வயது சிறுமி தமது 11 மாத தங்கையை தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள துர்கஷாசனம் கிராமத்தை சேர்ந்தவர் காவியா. அவருக்கு ஐந்து வயதில் நிர்மலா, என்ற பெண் குழந்தையும் 11 மாதமே ஆன ஹேமஸ்ரீ என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்னர் பக்கத்து வீட்டில் படுக்க வைக்கப்பட்டிருந்த குழந்தை ஹேமஸ்ரீ திடீரென்று காணவில்லை. ஹேமஸ்ரீயை பல்வேறு இடங்களிலும் தேடி பார்த்த பெற்றோர் அவளை வீட்டின் மேல்மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் இருந்து பிணமாக மீட்டனர். இதன் குறித்து ஸ்ரீகாகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறுதியில் ஹேமஸ்ரீயின் அக்கா நிர்மலா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு அவளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தங்கை பிறந்தது முதல் அவள் மீது பெற்றோர் அதிக பாசத்துடன் இருந்தாகவும் எனவே தங்கையை தண்ணீர் தொட்டியில் போட்டு விட்டேன் என்று அக்கா நிர்மலா அப்பாவியாக கூறினாள். நிர்மலா கூறியதை கேட்டு பெற்றோர் மட்டுமே அல்லாமல் போலீசாரும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் நிர்மலா மீது கொலை வழக்கு பதிவு செய்து அவளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் முடிவில் உள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்