இந்தியா

சரக்கு வாகனத்தின் பின்கதவு சரிந்து விபத்து : 4 பேர் உயிரிழப்பு - 2 பேர் படுகாயம்

ஆந்திராவில் சரக்கு வாகனத்தில் பின்பக்க கதவு சரிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.

தந்தி டிவி

ஆந்திராவில் சரக்கு வாகனத்தில் பின்பக்க கதவு சரிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். பிரகாசம் மாவட்டம், சோமேபல்லில் நடைபெறவிருந்த திருமணத்திற்காக, மணமகளை அழைத்துக்கொண்டு உறவினர்கள் 16 பயணித்துள்ளனர். சரக்கு வாகனத்தில் பயணித்தவர்களில், வாகனத்தின் பின்பக்க கதவில் அமர்ந்தபடி 6 பேர் பயணித்துள்ளனர். இதனிடையே, வேன் வேகமாக சென்று கொண்டிருந்த நிலையில், சிறு பள்ளத்தில் இறங்கி ஏறியதில், பாரம் தாங்காமல் பின்கதவு சரிந்துள்ளது. இதில், 6 பேரும் வாகனத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைய, 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்வம், திருமண வீட்டாரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதுடன், திருமணமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்