சாலையில் வழி விடுவது தொடர்பாக இருசக்கர வாகனம் ஓட்டுநர் மற்றும் மினி லாரி ஓட்டுனருக்கு ஏற்பட்ட வாக்குவாதத்தால் மினி லாரி ஓட்டுநர் இருசக்கர வாகன ஓட்டுனரை லாரியைக் கொண்டு இடித்து கொன்றதாக குற்றச்சாட்டு போலீசார் விசாரணை
மினி லாரியை கொண்டு இருசக்கர வாகனத்தில் மோதும் சிசிடிவி
கேரளம் மாநிலம் திருச்சூர் மாவட்டம்
தேசிய நெடுஞ்சாலை 544 ல் இருசக்கர வாகனத்தில் தனது நண்பருடன் சென்று கொண்டிருந்த ரிஜாஸ் புதுக்காடு சிக்னல் அருகே பின்னால் வந்த மினி லாரி மோதிய விபத்தில் ரிஜாஸ் உயிரிழந்தார் இந்தக் காட்சி முன்னாள் சென்ற காரின் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது
இந்த விபத்து குறித்து ரிஜாஸ் தந்தை காவல்துறையினரிடம் பின்னால் வந்த லாரி வேண்டுமென்றே இருசக்கர வாகனத்தை இடித்து விபத்து ஏற்படுத்தியதாக தெரிகிறது என காவல்துறையினரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து இந்த விபத்தில் ரிஜாசுடன் சென்று படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரிஜாஸ் நம்பரை போலீசார் விசாரணை செய்ததில் இந்த விபத்து ஏற்படுவதற்கு 15 நிமிடம் முன்பாக விபத்து ஏற்படுத்திய மினி லாரி ஓட்டுனருக்கும் ரிஜாஸிக்கும் வழி விடுவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதை கூறியுள்ளார் இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்ததோடு தீவிர விசாரணை செய்து வருகின்றனர்
மெதுவாக சென்று கொண்டிருந்த மினி லாரி ரிஜாஸின் பைக் கடந்து சென்ற போது வேகத்தை அதிகரித்து பைக்கின் பின்புறத்தில் மோதிய CCTV அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது