இந்தியா

அனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் கோலாகல திருமணம்

தந்தி டிவி

5 ஆயிரம் கோடி பணம் இருந்தால் ஒரு சாமானிய மனிதராக நீங்கள் என்ன செய்வோம்...

இந்த ஊரு என்ன விலைன்னு கேளு...இந்த தெரு என்ன விலைன்னு கேளு என்று கவுண்டமணியைப் போல் அலப்பறையைக் கூட்டி இருப்போம்...

(கவுண்டமணி டயலாக்...இந்த ஊரு என்ன விலைன்னு கேளு...அட இந்த தெருவாது என்ன விலைன்னு கேளு...நான் இப்ப எதையாவது வாங்கியாவது ஆகணுமேடா...)

ஆனால் அம்பானிக்கு 5000 கோடியெல்லாம் அல்வா சாப்பிடுவது மாதிரி...

அனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சென்ட் திருமண நிகழ்வுகளுக்கான மொத்த செலவு ஜஸ்ட் 5000 கோடி தான் என்று இணையத்தில் தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன...

திருமணம் என்னவோ ஒரு நாள் தான்...ஆனால் திருமணத்திற்கான கொண்டாட்டங்கள் பல மாதங்களாக களைகட்டியுள்ளது...

அம்பானி வீட்டு விசேஷத்திற்காக கடந்த மார்ச் மாதம் குஜராத்தின் ஜாம்நகரே ஜாம் ஜாம் என இருந்தது நினைவிருக்கிறதா?...

ஆயில் தொழிற்சாலையுடன் கூடிய விலங்குகள் பூங்காவில் திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் பிரம்மாண்ட விருந்துடன் விமரிசையாக நடைபெற்றது... உலக பிரபலங்கள் எல்லாம் ஒன்றாய் குவிந்தனர் அங்கு... இதற்கே 1200 கோடி வரை செலவானதாம்...!

அடுத்து இத்தாலி டூ பிரான்ஸ் சொகுசு கப்பலில் நண்பர்களுக்கு, விருந்தினர்களுக்கு விருந்து வைத்தார் முகேஷ் அம்பானி...இங்கு ஒரு ஆயிரத்து 500 கோடி செலவாம்...!

திருமண அழைப்பிதழுக்கு மட்டும் கோடிகளில் பணத்தை செலவு செய்துள்ளார்களாம்...!

உலகப் புகழ்பெற்ற பாப் பாடகர்களான ஜஸ்டின் பைபர், ரிஹானா, கேட்டி பெர்ரி, Backstreet Boys க்ரூப்பின் இசைக்கச்சேரிக்கு மிகப்பெரிய தொகை செலவாகியுள்ளது...

ஆக மொத்தம் எல்லாம் சேர்த்து 5000 கோடி செலவாகியுள்ளதாம் அனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு...!

இது முகேஷ் அம்பானியின் மொத்த சொத்தில் வெறும்ம்ம்ம்ம் 0.5 சதவீதம் தான்... அதாவது டிப்ஸ் கொடுப்பது மாதிரி...

இம்புட்டு பணம் இருந்தால் 10 தலைமுறைக்கு உக்காந்து சாப்பிடுவோமேயா என்று இணையவாசிகள் புலம்பி வருகின்றனர்...

இந்த 5 ஆயிரம் கோடி மட்டும் இருந்தால் 10 ஆஸ்கர் நிகழ்வுகளையே நடத்தி விடலாம் என்று ஒரு கும்பல் கதி கலங்கி போயிருக்கிறது...

என்னதான் சொல்லுங்கள்... சராசரி இந்தியர்கள் தங்கள் குழந்தைகளின் திருமணத்திற்கு தங்கள் மொத்த சொத்தில் இருந்து 5 முதல் 15 சதவீதம் வரை செலவழிக்கிறார்களாம்...

ஆனால் உலக பணக்காரர் அம்பானியோ வெறும் 0.5 சதவீதம் மட்டுமே செலவழித்திருக்கிறார் என்று ஒரு சிலர் மனதைத் தேற்றிக் கொண்டுள்ளனர்...

எப்படியாயினும்...5000கோடி செலவு செய்து திருமணம் நடத்திய அம்பானி குடும்பத்தைக் கண்டு உலகமே வாயடைத்துப் போயிருக்கிறது என்பதே உண்மை...

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை