இந்தியா

தேசிய கட்சிகளின் தேர்தல் செலவினங்கள் குறித்த அறிக்கை வெளியீடு

2018-19 ஆம் நிதியாண்டில் தேசிய கட்சிகளின் வருவாய் மற்றும் செலவினங்கள் தொடர்பான தகவல்களை ஜனநாயக சீர்த்திருத்த அமைப்பான ஏ.டி.ஆர் வெளியிட்டுள்ளது.

தந்தி டிவி

2018-19 ஆம் நிதியாண்டில் தேசிய கட்சிகளின் வருவாய் மற்றும் செலவினங்கள் தொடர்பான தகவல்களை ஜனநாயக சீர்த்திருத்த அமைப்பான ஏ.டி.ஆர் வெளியிட்டுள்ளது.

அதன் படி, பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், திரிணமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய 6 தேசிய கட்சிகள் 3 ஆயிரத்து 88 கோடி ரூபாயை, நன்கொடையாக பெற்றதாக கூறப்பட்டுள்ளது. இது கட்சிகளின் மொத்த வருவாயில் 83 சதவீதமாகும். தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம், பாஜக, காங்கிரஸ், திரிணமுல் ஆகிய கட்சிகள் ஆயிரத்து 931 கோடியே 43 லட்சம் ரூபாயை, நிதியாக பெற்றுள்ளன.

இதே போல், பாஜகவுக்கு நன்கொடையாக 2 ஆயிரத்து 454 கோடியே 2 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. இது அக்கட்சியின் மொத்த வருமானத்தில் 97.67 சதவீதமாகும். இதே போல், காங்கிரஸ் கட்சிக்கு நன்கொடை மூலம் 551 கோடியே 55 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. இது அக்கட்சியின் மொத்த வருமானத்தில் 60 புள்ளி 8 சதவிகிதம் ஆகும்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி