Crowd ஆந்திரா, கர்நாடகா, கேரளம் தெலங்கானாவில் இருந்தும் தமிழகத்திற்கு படையெடுப்பு
#annamalaiyartemple #thiruvannamalai #crowd
அண்ணாமலையார் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் தொடர் விடுமுறை காரணமாக, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று காலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பொது தரிசனத்தில் 3 முதல் 4 மணி நேரத்திற்கும் மேலாகவும், 50 ரூபாய் கட்டண தரிசனத்திலும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.