இந்தியா

இந்திய மாணவனுக்கு சரமாரி கத்தி குத்து.. ஆஸ்திரேலியாவில் நடந்த பயங்கரம்

தந்தி டிவி

இந்திய மாணவனுக்கு சரமாரி கத்தி குத்து.. ஆஸ்திரேலியாவில் நடந்த பயங்கரம்

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவன் கத்தியால் சரமாரியாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் ஆக்ராவை சேர்ந்த சுபம் கார்க் என்ற அந்த மாணவன், ஆஸ்திரேலியாவில் முனைவர் பட்டம் படிக்க சென்றிருந்தார்.

இந்நிலையில், கடந்த ஆறாம் தேதி இரவு, சிட்னி நகரில் உள்ள பாலத்தில் சுபத்தை மறித்த ஆஸ்திரேலிய இளைஞர் டேனியல் நார்வுட் , அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது சுபம் பணம் மற்றும் செல்போனை கொடுக்க மறுக்கவே, டேனியல் அவரை சரமாரியாக கத்தி கொண்டு தாக்கியுள்ளார்.

உடலில் 11 இடங்களில் கத்தி குத்துக்கு ஆளான சுபத்திற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

தற்போது அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவில் உள்ள சுபத்தின் குடும்பத்தை ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைக்க விசா ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்