இந்தியா

தீயின் கோரத்தில் சிக்கி மூச்சுத்திணறும் அமேசான்

அமேசான் மழைக்காடுகள் தீப்பற்றி எரிந்து வரும் நிலையில் காடுகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு

தந்தி டிவி

பூமியின் நுரையீரல் என அழைக்கப்படும் அமேசான் மழைக்காடுகள் கடந்த சில நாட்களாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. பல அரிய வகை மூலிகை மரங்கள் தீயில் கருகி சாம்பலாவதும், விலங்குகள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடும் காட்சிகளும் நம்மை பதைபதைக்க வைக்கிறது. இந்த தீ விபத்து உலக நாடுகளுக்கு மத்தியில் விவாதப் பொருளாகி இருக்கும் நிலையில் சுற்றுச்சூழலுக்கும் ஒரு சவாலான அச்சுறுத்தலாகவே இது பார்க்கப்படுகிறது.

சுமார் 55 லட்சம் சதுர கிலோ மீட்டர் கொண்ட அமேசான் காட்டின் பெரும் பகுதி தீக்கிரையாகி உள்ள நிலையில் 20 சதவீதம் ஆக்சிஜனை உலகத்திற்கு வழங்கும் இந்த காடு, தற்போது மூச்சு திணறிக் கொண்டிருக்கிறது. வறண்ட வானிலை, அதீத வெப்பம் என இந்த விபத்துக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், மனிதர்களும் பிரதான காரணம் என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்..

ஓசை சையது, சுற்றுச்சூழல் ஆர்வலர் :

ஆக்சிஜனை வெளியிடும் காடுகள், தற்போது மனிதர்களுக்கு ஆபத்துகளை விளைவிக்கும் கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றிக் கொண்டிருக்கிறது. இதனால் உலக நாடுகளை அச்சுறுத்தும் ஒரு விவாதப் பொருளாக அமேசான் காடுகள் மாறியிருக்கிறது.

நிர்மல், சுற்றுச்சூழல் ஆர்வலர் :

அதேநேரம் இதுவரை நாம் பார்த்திராத பல அரிய வகை விலங்குகளும் உயிரிழந்து கிடப்பது வன ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. வன விலங்குகளை பாதுகாப்பதன் அவசியமும் நம் முன் வைக்கப்பட்டுள்ளது.

எத்தனை மாற்றங்கள் வந்தாலும் நம்மால் உருவாக்க முடியாத இயற்கையை குறைந்தபட்சம் பாதுகாக்க வேண்டியது நம் கடமையும் கூட...

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி