உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், ஒரு வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில் உருவான பனிக்கட்டி சிவலிங்க வடிவத்தை ஒத்திருப்பதாக கூறப்பட்டதை தொடர்ந்து, அங்கு ஏராளமானோர் குவிந்தனர். பலர் இதனை அமர்நாத் பனி லிங்கத்துடன் ஒப்பிட்டு, ஜலாபிஷேகம் செய்து வழிபாடு நடத்தியதுடன், காணிக்கையும் செலுத்தி உள்ளனர். இந்த தகவல் வேகமாக பரவியதால், அப்பகுதி மக்கள் அந்த வீட்டிற்கு திரண்டு வந்து பனிக்கட்டியை தரிசித்து வழிபட்டு வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.