இந்தியா

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா நீக்கம் - உயர்மட்ட தேர்வுக்குழு அதிரடி முடிவு

சிபிஐ இயக்குனர் பொறுப்பில் இருந்து அலோக் வர்மா மீண்டும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

சிபிஐ இயக்குனர் பொறுப்பில் இருந்து அலோக் வர்மா மீண்டும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சிபிஐ-ன் இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான உயர்மட்ட தேர்வுக்குழு, இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அலோக் வர்மாவிற்கு எதிரான புகார்கள் குறித்த மத்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் அறிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இடையேயான மோதலில், கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட அலோக் வர்மாவை, மீண்டும் பணியமர்த்துமாறு உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, அலோக் வர்மா மத்திய தீயணைப்பு துறையின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை