இந்தியா

மழை நிவாரண நிதி அனைத்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கே பயன்படுத்தப்படும் - கேரள முதலமைச்சர்

மழை நிவாரண நிதி அனைத்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கே பயன்படுத்தப்படும் எனவும் பொய் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம் எனவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தந்தி டிவி

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கனமழைக்கு மாநிலம் முழுவதும் இதுவரை 95 பேர் பலியானதாக தெரிவித்துள்ளார். ஆயிரத்து 118 முகாம்களில் 1 லட்சத்து 89 ஆயிரம் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கனமழை மற்றும் மண்சரிவால் வீடுகளை முழுமையாக இழந்தவர்களுக்கு தலா 4 லட்ச ரூபாயும், வீட்டுடன் நிலத்தையும் இழந்தவர்களுக்கு தலா 10 லட்ச ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என பினராயி விஜயன் தெரிவித்தார்.

அரசுக்கு வழங்கப்படும் நிவாரண நிதி, அனைத்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக செலவிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார். நிவாரண நிதி முழுமையாக செலவிடப்படவில்லை என சிலர் மேற்கொள்ளும் பொய் பிரசாரங்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை