ஏர்போர்ட்டுக்கு பிரதமர் பெயர் - உ.பி முதல்வர் அறிவிப்பு #Airport #NoidaAirport #PrimeMinisterModi #thanthitv "நொய்டா விமான நிலையத்திற்கு பிரதமர் மோடியின் பெயர்" உத்தரப் பிரதேசத்தின் ஜேவார் பகுதியில் அமைந்துள்ள நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு, ‘நரேந்திர மோடி சர்வதேச விமான நிலையம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையத்தின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், உத்தரப் பிரதேச அரசு சுவிட்சர்லாந்தின் ‘ஜூரிச் ஏர்போர்ட்’ நிறுவனத்துடன் இணைந்து இந்த அதிநவீன விமான நிலையத்தை உருவாக்கியுள்ளது. ஆண்டுக்கு ஒரு கோடியே 20 லட்சம் பயணிகள் பயணிக்கும் வசதியுடன் முதற்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. விரைவில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள உள்ள நிலையில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், புதிய விமான நிலையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்படுவதாக அறிவித்துள்ளார்...