இந்தியா

இந்திய விமானப்படையின் ஏஎன் - 32 ரக போர் விமானம் 13 பேருடன் மாயம்

அசாம் மாநிலம் ஜோர்ஹாத் விமானப்படைத்தளத்தில் இருந்து 13 பேருடன் புறப்பட்ட AN - 32 ரக விமானம் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

அசாம் மாநிலம் ஜோர்ஹாத் விமானப்படைத்தளத்தில் இருந்து 13 பேருடன் புறப்பட்ட AN - 32 ரக விமானம் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆன்டனோவ் 32 எனப்படும் இந்த விமானத்தில், 8 விமானப்படை வீரர்கள் மற்றும் 5 பயணிகள் என 13 பேர் பயணம் செய்தனர். அசாமில் இருந்து அருணாசல பிரதேசத்தின்

மெச்சுக்கா பள்ளத்தாக்கு நோக்கி பகல் 12.30 மணிக்கு விமானம் புறப்பட்டது. ஆனால், விமானம் அங்க தரையிறங்கவில்லை. இறுதியாக பகல் 1 மணி அளவில் அதன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனையடுத்து, காணாமல் போன AN-32 ரக விமானத்தை தேடும் பணியில், சுகோய் 30 மற்றும், சி 130 ரக சிறப்பு தேடுதல் விமானங்கள் ஈடுபட்டுள்ளன. சீன எல்லையையொட்டியுள்ள, அருணாசல பிரதேச வான்பகுதியில் பறந்த போது விமானம் மாயமானதாக, முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி