இந்தியா

பிரபல மலையாள படத்திற்கு வலுக்கும் சர்ச்சை - மம்முட்டியின் மகனும் நடிகருமான துல்கர் சல்மான் வருத்தம்

பிரபல நடிகர் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்த மலையாள படமொன்றில் வரும் நாய்க்குட்டி கதாபாத்திரத்திற்கு சர்ச்சைக்குரிய வகையில் பெயரிட்டதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தந்தி டிவி

கடந்த பிப்ரவரி மாதம் வெளியான மலையாள படம் 'வரேனே அவசியமுண்டு'. இந்த படத்தில் பிரபல நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் வரும் நாய்க்குட்டி கதாபாத்திரத்திற்கு பிரபா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்பெயர் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் பிரபாகரன் பெயரை குறிப்பிட்டு இழிவு படுத்தும் வகையில் பெயரிடப்பட்டதாகக்கூறி பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்நிலையில் இது குறித்து ட்விட்டர் வெளியிட்டுள்ள துல்கர் சல்மான், என்னையும் இப்படத்தின் இயக்குநரான அனுப்பையும் விமர்சிப்பதற்கு உரிமை உள்ளது எனவும் ஆனால் என் தந்தையை பற்றி பேசுவது தவறு எனத் தெரிவித்துள்ளார். மேலும் குறிப்பிட்ட நபரை இழிவு படுத்தும் வகையில் பெயர் இடம் பெறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 'பட்டணத்தில் பிரவேஷம்' என்ற பழைய மலையாள படத்தில் வரும் பெயரையே இப்படத்திற்கு பயன்படுத்தியுள்ளதாகவும் துல்கர் சல்மான் குறிப்பிட்டுள்ளார்.

Isrealattack | தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் - உக்கிரமாகும் போர்.. மத்திய கிழக்கில் உச்சகட்ட பதற்றம்

🔴LIVE: Israel | Iran | உலகிற்கே கெட்ட செய்தி.. ஈரான் போர் மீண்டும் ஆரம்பம்?

#BREAKING || Earthquake | திடீர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை - மரண பயத்தில் மக்கள்

Breaking | Perambur Incident | பெரம்பூரில் சூட்கேசில் உடல்.. செங்கல்பட்டில் வீசப்பட்ட தலை..

Minister Ramesh | TVK | கோயில்களில் புதிய தரிசன டோக்கன் முறை - இன்ச் பை இன்ச் விளக்கும் அமைச்சர்