இந்தியா

ED ஆபீஸ் வாசலை மிதித்த பின் பிரகாஷ் ராஜ் சொன்ன வார்த்தை..

தந்தி டிவி

ED விசாரணை - "ஒரு குடிமகனாக பதில் அளிக்க வேண்டிய கடமை தனக்கு உண்டு"

ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம் செய்த விவாகரம் தொடர்பாக, நடிகர் பிரகாஷ் ராஜ் ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜர் ஆனார். விசாரணைக்கு பின் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், ஆன்லைன் சூதாட்ட செயலியுடன் ஒப்பந்தம் செய்து இருந்ததாகவும் ஆனால், அதன் செயல்பாடுகள் குறித்து கவலைகள் எழுந்ததால் 2017 ஆம் ஆண்டிலேயே அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டதாக விளக்கம் அளித்தார். இது குறித்த வழக்கில், சரியான முறையில் அமலாக்கத்துறை அவர்களது பணியை செய்வதாக கூறிய நடிகர் பிரகாஷ் ராஜ், அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு தான் ஒத்துழைத்ததாகவும், ஒரு குடிமகனாக தனக்கு பதில் அளிக்க வேண்டிய கடமை இருப்பதாகவும் கூறினார். குறிப்பாக, 2016-க்கு பிறகு சூதாட்ட செயலி விளம்பரங்களில் நடிக்கவில்லை எனவும், இந்த செயலிகளால் நான் பணம் சம்பாதிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார். 

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா