இந்தியா

ஆம்போடெரிசின்-பி குப்பிகள் கூடுதலாக ஒதுக்கீடு... மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தகவல்

கறுப்பு பூஞ்சை நோய்க்கான ஆம்போடெரிசின் - பி மருந்தை, கூடுதலாக 680 குப்பிகள் தமிழகத்திற்கு ஒதுக்கி இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

தந்தி டிவி

ஆம்போடெரிசின்-பி குப்பிகள் கூடுதலாக ஒதுக்கீடு... மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தகவல்

கறுப்பு பூஞ்சை நோய்க்கான ஆம்போடெரிசின் - பி மருந்தை, கூடுதலாக 680 குப்பிகள் தமிழகத்திற்கு ஒதுக்கி இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.ஆம்போடெரிசின் - பி மருந்தை அந்தந்த மாநிலங்களில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அடிப்படையில், மத்திய அரசு ஒதுக்கி வருகிறது. அதன்படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கூடுதலாக 30 ஆயிரத்து 100 ஆம்போடெரிசின் - பி குப்பிகள் இன்று ஒதுக்கப்பட்டுள்ளதாக, மத்திய ராசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார். இதில் தமிழகத்திற்கு கூடுதலாக 680 ஆம்போடெரிசின் - பி குப்பிகளை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும், மகாராஷ்டிரா மாநிலத்திற்கு 5ஆயிரத்து 900 மற்றும் குஜராத் மாநிலத்திற்கு 5 ஆயிரத்து 630 குப்பிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு முன், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 80 ஆயிரம் ஆம்போடெரிசின் - பி மருந்தை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்