இந்தியா

அதானி -ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரம்.. உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல்

தந்தி டிவி

அதானி -ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரத்தை

விசாரிக்க எஸ்ஐடி அமைக்கும் கோரிக்கையை நிராகரித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதானி குழுமம் புகார் தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யாத இந்திய பங்குகள், பரிவா்த்தனை வாரியத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில், இந்திய பங்குகள் மற்றும் பரிவா்த்தனை வாரியத்தின் விசாரணையில் சந்தேகம் கொள்ள முடியாது என்று தீர்ப்பளித்தது. அதேசமயம், அதானி -ஹிண்டன்ப்ர்க் அறிக்கை விவகாரத்தை விசாரிக்க எஸ்ஐடி அமைக்கும் கோரிக்கையையும் உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரி அனாமிகா ஜெய்ஸ்வால் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதிய ஆவணங்கள் கிடைத்துள்ள நிலையில் தீர்ப்பில் பல்வேறு தவறுகள் இருப்பதாகவும், எனவே தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்