இந்தியா

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து வீடியோ வெளியிட்ட நடிகை கைது

தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டை கண்டித்து வீடியோ வெளியிட்ட நடிகை நிலானியை குன்னூரில் போலீசார் கைது செய்தனர்

தந்தி டிவி

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து போலீஸ் உடையில் நடிகை நிலானி வீடியோ ஒன்றை பதிவு செய்து வெளியிட்டு இருந்தார். காவல்துறையினரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அவர் பேசியிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதனையடுத்து ரிஷி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், வடபழனி போலீசார் நடிகை நிலானி மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் குன்னூரில் இருந்த நடிகை நிலானியை போலீசார் இன்று கைது செய்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்