இந்தியா

ஐ.பி.சி சட்டத்தில் அதிரடி மாற்றம்..! குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் | IPC | CRPC

தந்தி டிவி

ஐ.பி.சி., எனப்படும், இந்திய தண்டனை சட்டம், சிஆர்.பி.சி., எனப்படும் குற்றவியல் நடைமுறை சட்டம், ஐ.இ.சி., எனப்படும் இந்திய சாட்சியங்கள் சட்டம் முறையே 1860, 1898 மற்றும் 1872ல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இயற்றப்பட்டன. இந்த மூன்று சட்டங்களையும் இந்த காலக்கட்டத்துக்கு ஏற்ப மாற்றி அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. சில திருத்தங்களை மேற்கொள்ளும்படி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியதை அடுத்து, நிலைக்குழுவின் ஆய்வுக்கு இந்த மசோதா அனுப்பப்பட்டது. நிலைக்குழு பல பரிந்துரைகளை அளித்தது. பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டு தாக்கல் செய்யப்பட்ட குற்றவியல் திருத்த சட்ட மசோதா, லோக்சபாவை தொடர்ந்து, ராஜ்யசபாவில் குரல் ஓட்டெடுப்பு வாயிலாக நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் மூன்று மசோதாக்களும் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்தார். 3 மசோதாக்களும் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டு 3 மாதங்களுக்குள் சட்டங்களாக நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்