#sirprotest #cjp #abhijitdipke தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி டெல்லியில் நடத்தவிருந்த போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், போராட்டத்திற்குத் திரண்டவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அதிரடியாகக் கைது செய்தனர். ஜந்தர் மந்தரில் நடைபெறவிருந்த இந்தப் போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற முக்கியத் தலைவர்கள் வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே, விமானத்திற்குள்ளேயே வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே அவரது பாட்டி காலமானதைத் தொடர்ந்து, இறுதிச்சடங்கில் பங்கேற்க அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அக்கட்சி கோரிக்கை விடுத்தது. நீதிமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய பெண் வழக்கறிஞர்கள் உட்பட பலரும் தடுத்து வைக்கப்பட்டு யமுனா ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸிற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், தலைமை நீதிபதி சூர்யா காந்த் உத்தரவின்பேரில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். மேலும், நூற்றுக்கணக்கான இளைஞர்கள் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் , மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கைது செய்யப்பட்ட இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து, ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார்.