புதுச்சேரி டிஜிபி அலுவலகம் முன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு ஆம் ஆத்மி நிர்வாகி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த காவலர்கள், தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக ஆம் ஆத்மி தொழிற்சங்க தலைவர் மணிமாறனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தனக்கு சிலர் மிரட்டல் விடுப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என மணிமாறன் குற்றம்சாட்டியுள்ளார்.