இந்தியா

பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கால அவகாசம் ஜூன் இறுதி வரை நீட்டிப்பு

பான் எண்ணுடன் ஆதார் எண்களை இணைப்பதற்கான கால அவகாசத்தை ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது

தந்தி டிவி

பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கால அவகாசம் ஜூன் இறுதி வரை நீட்டிப்பு

பான் எண்ணுடன் ஆதார் எண்களை இணைப்பதற்கான கால அவகாசத்தை ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது.பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றுடன் கால அவகாசம் முடிவதாக அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. இணைக்க தவறினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகின. பான் எண்ணுடன் ஆதார் எண்களை இணைப்பதற்கு வருமானவரித் துறை இணையதளத்தில் அனைவரும் ஒரே நேரத்தில் முயற்சி செய்ததால், நேற்று காலையிலிருந்து இணையதளம் முடங்கியது,. இந்த நிலையில் மேலும் ஜூன் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்