இந்தியா

"ஆதார் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டது" - உச்சநீதிமன்றம்

ஆதார் அட்டை அரசியல் சாசனத்திற்கு உட்பட்டது எனவும் போலியாக ஆதாரை உருவாக்க முடியாது எனவும் உச்சநீதிமன்ற நீதிபதி சிக்ரி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஆதாருக்கு எதிரான வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி கன்வில்கர் மற்றும் நீதிபதி ஏ.கே.சிக்ரி ஆகியோர் ஆதார் செல்லுபடியாகும் என தீர்ப்பு வழங்கினர். அதில், கடந்த சில ஆண்டுகளில் அதிகமாக பேசப்படும் ஒன்றாக ஆதார் மாறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த வகையிலும் ஆதார் எண்ணை போலியாக உருவாக்க முடியாது என்றும், ஆதார் அடையாள அட்டைக்கும் மற்ற அடையாள அட்டைகளுக்கும் வித்தியாசம் உள்ளதாகவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆதார் என்பது மற்ற அடையாள ஆவணங்களைப் போல கிடையாது என்றும் ஒருவருக்கு கொடுக்கப்படும் ஆதார் அடையாள அட்டையை வேறு ஒருவருக்கு கொடுக்க முடியாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிநபர் சுதந்திரத்தை பாதிக்கிறது என்பது மட்டுமே அதில் பிரச்சினையாக உள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், ஆதார் அட்டை அரசியல் சாசனத்திற்கு உட்பட்டது என்றும், போலியாக ஆதாரை உருவாக்க முடியாது எனும் நிலையில், அதில் சிறுசிறு திருத்தங்கள் செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும், ஆதாருக்கான சட்ட விதிகள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களை கேட்பது சட்ட விரோதம் எனவும் தெரிவித்துள்ளது.

கல்வி என்பது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை என்பதால் அதில் ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது என, உச்ச நீதிமன்றம், தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது

* "வங்கிக்கணக்குகளை தொடங்கவும், மொபைல் எண் பெறவும் ஆதார் கட்டாயமில்லை"

* "ஆதார் இல்லை என்பதற்காக தனி நபரின் உரிமைகள் மறுக்கபடக்கூடாது"; "பான் எண்ணோடு ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம்"

* "ஆதார் இல்லை என்பதற்காக தனி நபரின் உரிமைகள் மறுக்கபடக்கூடாது" - "பான் எண்ணோடு ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம்"

* "சி.பி.எஸ்.இ., - நீட் தேர்வுகளுக்கு ஆதாரை கட்டாயமாக்க கூடாது"

* "ஒருவரின் கையெழுத்தை கூட மாற்றலாம், ஆனால் கைரேகையை மாற்ற முடியாது"

ஆதார் செல்லுபடியாகும் - மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி கருத்து

ஆதார் செல்லுபடியாகும் - வெங்கடாசலம் (வங்கி ஊழியர் சங்கம்) கருத்து

ஆதார் செல்லுபடியாகும் - ரவிக்குமார் (விடுதலை சிறுத்தை கட்சி) கருத்து

ஆதார் செல்லுபடியாகும் - பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) கருத்து

ஆதார் செல்லுபடியாகும் - வெங்கடாசலம் (வங்கி ஊழியர் சங்கம்) கருத்து

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி