இந்தியா

பிரதமர் சொன்ன ஒரு வார்த்தை.. அதிர்ச்சியில் ஜெகன்.. இந்திய மக்களுக்கும் இதில் ஒரு சேதி உள்ளது

தந்தி டிவி

#modi #jaganmohanreddy

தேர்தலுக்கு பின் மேலும் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று ஆந்திராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Vovt

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் உள்ள பொப்புடி கிராமத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி பங்கேற்ற இந்த பொதுக்கூட்டத்தில், ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தேசிய ஜனநாயக கூட்டணியின் லட்சியமே, வளர்ந்த ஆந்திரா மற்றும் வளர்ந்த பாரதம் என்றார். அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து செல்வதே தேசிய ஜனநாயக கூட்டணியின் சிறப்பு என்றும், காங்கிரஸ் கட்சியோ, கூட்டணி கட்சிகளை பயன்படுத்திக்கொண்டு, பின்னர் துாக்கி எறியும் என்று விமர்சித்தார். ஆந்திராவில், அமைச்சர்களிடையே ஊழல் செய்வதில் போட்டி நிலவுவதாக குற்றம் சாட்டிய பிரதமர், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியும், காங்கிரசும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே நடத்துவதாக விமர்சித்தார். தேசிய ஜனநாயக கூட்டணி வரும் தேர்தலில் வெற்றிபெற்று, மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து பல பெரிய முடிவுகளை எடுக்கும் என்று பிரதமர் மோடி கூறினார். 

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி