இந்தியா

கிடுகிடுக்கவிட்ட நீர்வழி தாக்குதல் பவர்.. உட்கார்ந்த இடத்தில் இருந்து அலறவிட்ட இந்திய ஆர்மி

thanthitv

குஜராத் மாநிலம் புஜ் பகுதியில் இந்திய ராணுவம் நீர்வழி நடவடிக்கைகளில் தனது தாக்குதல் திறனை வெளிப்படுத்தும் வகையில் சாகசப் பயிற்சியில் ஈடுபட்டது. சிறப்புப் போர்க் குழுக்கள் அதிவேக தாக்குதல் படகுகள் மூலம் ஆழமற்ற நீர்நிலைகளில் விரைவாகச் செயல்பட்டு தந்திரோபாய திறன்களை காட்டின. மேலும் எல்-70 பீரங்கி நிலைநிறுத்தல், ரோந்து நடவடிக்கைகள், ட்ரோன் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்புப் பயிற்சிகளும் நடத்தப்பட்டன. இதன் மூலம் எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவத்தின் தயார் நிலையும் கண்காணிப்பு திறனும் வலுப்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நீரிலும் நிலத்திலும் தாக்குதல் நடத்தக்கூடிய இந்தப் பயிற்சிகள், எதிரி அச்சுறுத்தல்களை சமாளிக்க இந்திய ராணுவம் முழுமையாகத் தயாராக இருப்பதை வெளிப்படுத்துகின்றன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்