இந்தியா

தகாத உறவில் ஜாலியாக இருந்த ஜோடி... மக்கள் கொடுத்த விநோத தீர்ப்பு..! மத்திய அமைச்சரை புலம்ப வைத்த வைரல் வீடியோ... பீகாரில் பரபரப்பு

தந்தி டிவி

பீகாரில் தகாத உறவில் இருந்த ஜோடியை ஊர்மக்கள் நூதன முறையில் தண்டனை வழங்கி கண்டித்தது, நாட்டின் மத்திய அமைச்சரில் இருந்து, தேசிய மகளிர் ஆணையம் வரை சென்றிருக்கிறது... பார்க்கலாம் விரிவாக...

திருமணத்தை தாண்டிய தகாத உறவு... ஒருவரது உடலை தொற்றிக் கொள்ளும் கொடிய நோய்க்கு சான்று...

அந்த உறவில் இருப்பவர்களை மெல்ல மெல்ல அது அழிப்பதோடு, அவர்களை சார்ந்திருக்கும் குடும்பத்தையும், வாரிசைகளையும் வேரோடு ஸ்தம்பித்து போக செய்துவிடும்...

இதனால், அழிந்துபோன குடும்பங்கள் பல.... இதில், பெரும் கொடூரமான ஒன்று... தன்னை உண்மையாக நேசிப்பவர்களை அநியாயமாகவும், கொடூரமாகவும் கொலை செய்யும் அளவுக்கு அவர்களை அழைத்து சென்றுவிடும் இதன் மோகம்....

இந்நிலையில், பீகாரின் மோதிகாரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இளைஞரும், பெண் ஒருவரும் தகாத உறவில் இருந்த நிலையில், அவர்களை கிராம மக்கள் நூதன முறையில் வினோதமாக கண்டித்தது பெரும் சர்ச்சைக்குள்ளாகி பேசு பொருளாகியிருக்கிறது...

இருவரின் தகாத உறவும் கிராமத்தாருக்கு தெரியவர அவர்களை இருவரையும் கிராமத்தை கூட்டி இழுத்து வந்த பொது மக்கள், அவர்களின் கையில் கைத்தடிகளை கொடுத்து மாறி மாறி தாக்கி கொள்ளும்படி கூறியுள்ளனர்....

ஏற்கெனவே, அதிர்ச்சியிலும், பதற்றத்திலும் இருந்த இருவரும், குழம்பி போய், ஒருவரை மாறி மாறி அடித்த நிலையில், இருவரையும் கிராமத்தார் ஒருவர் தனது கையில் வைத்திருந்த கைத்தடியால் வெளுத்து வாங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது...

இதனிடையே இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில், விவகாரத்தை சுட்டிக்காட்டி மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பதிவு ஒன்றை பதிவிட்டார்...

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பிரதமராக வேண்டும் என்ற கனவில் தூங்கி கொண்டிருப்பதால், மாநிலத்தில் சட்ட ஒழுங்கு சுற்றுப்பயணம் சென்றிப்பதாக கூறி அவர் விமர்சனம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது....

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்னா, மாநிலத்தில் பெண்களின் பாதுக்காப்பு கவலையளிப்பதாக கூறிய நிலையில் , சம்பவம் மீதான நடவடிக்கை குறித்து பீகார் டிஜிபியிடம் விளக்கம் கேட்டுள்ளார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்