இந்தியா

பதவி உயர்வு அளித்து அரசாணை - சந்தோஷத்தில் அமைச்சருக்கு முத்தமிட்ட காவலர்

தந்தி டிவி

புதுச்சேரியில் பதவி உயர்வு பெற்ற ஐஆர்பிஎன் காவலர்கள், உள்துறை அமைச்சருக்கு மாலை அணிவித்து, தோளில் தூக்கி கொண்டாடினர். புதுச்சேரியில் 10 முதல் 20 வருடங்கள் பணியாற்றிய ஐஆர்பிஎன் காவலர்களுக்கு, பதவி உயர்வு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து ஐஆர்பிஎன் காவலர்கள், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை, அவரது இல்லத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது ஒரு காவலர் உற்சாக மிகுதியில், அமைச்சர் நமச்சிவாயத்தின் கன்னத்தில் முத்தமிட்டார் . தொடர்ந்து, அமைச்சருக்கு மாலை அணிவித்த காவலர்கள், அவரை தோளில் தூக்கி கொண்டாடினர்

Villupuram | Fire |திடீரென குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ- NH சாலையை முழுவதுமாக மூடிய கரும்புகை

Tollgate Price | சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு இன்று முதல் அமல் - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

JCD Prabhakar | ADMK MLA | ராஜினாமா செய்த 4 அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் பரபரப்பு நோட்டீஸ்

TN Govt | ``அவகாசம்'' - அரசாணை பிறப்பித்த தமிழக அரசு

Trichy Hospital Issue | நோயாளியை எலி கடித்த விவகாரம் - தூய்மை பணி ஒப்பந்ததாரருக்கு பறந்த உத்தரவு