புதுச்சேரியில் பிறந்தநாளைக் கொண்டாடிய ரவுடி நடுரோட்டில் பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற ரவுடி ஆனந்தை 10 பேர் கொண்ட மர்ம கும்பல் சினிமா பாணியில் பின் தொடர்ந்து சென்று சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தது.
கொலைக்கான காரணம் குறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முந்தைய கொலைக்குப் பழிக்கு பழியாக இந்தச் சம்பவம் நடந்ததா என்ற கோணத்தில் மூன்று தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பிறந்தநாள் அன்று ரவுடி வெட்டிக் கொல்லப்பட்ட இந்தச் சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.