இந்தியா

8 வழிச்சாலை திட்டத்தை வேறு மாநிலத்தில் செயல்படுத்தலாமே? - உச்சநீதிமன்ற நீதிபதிகள் மத்திய அரசுக்கு கேள்வி

எட்டு வழிச்சாலைக்கு இடம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிரான வழக்கில், அந்த திட்டத்தை வேறு மாநிலத்தில் செயல்படுத்தலாமே என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது

தந்தி டிவி

எட்டு வழி சாலைக்கு இடம் கையப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக திட்ட இயக்குனர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை இன்று என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று உள்ள நிலையில் பணிகளுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் திட்டத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. எட்டு வழி சாலை சட்டத்துக்கு தமிழகத்தில் எதிர்ப்பு இருக்கும் போது இத்திட்டத்தை வேறு மாநிலத்தில் செயல்படுத்தலாமே என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் சாலைத் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்று மத்திய அரசு உறுதி அளித்தது. இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் 31ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்