இந்தியா

Nepal Flood | Disaster | மாயமான ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர்-கண்ணீர் மல்க தவிக்கும் குடும்பத்தினர்

மாயமான ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர்-கண்ணீர் மல்க தவிக்கும் குடும்பத்தினர்

thanthitv

Nepal Flood | Disaster | மாயமான ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் - கண்ணீர் மல்க தவிக்கும் குடும்பத்தினர்

நேபாள பேரழிவு - 49 தமிழர்களின் கதி என்ன? நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில், குரோம்பேட்டை தனியார் டிராவல்ஸ் மூலம் கைலாய யாத்திரை சென்ற 49 தமிழர்கள் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 26ஆம் தேதி நேபாளத்தின் ராசுவாகடி குடியுரிமை மையத்தில் காத்திருந்தபோது திடீரென வெள்ளம் சூழ்ந்து அலுவலகம் அடித்துச் செல்லப்பட்டதில், டிராவல்ஸ் உரிமையாளர் மகன் சத்யநாராயணன் உட்பட 49 பேரின் நிலை என்னவென்று தெரியாமல் உறவினர்கள் தவித்து வருகின்றனர். இதில் பாமக முன்னாள் கவுன்சிலர் குமாரின் குடும்பத்தினர் 6 பேர் உட்பட குரோம்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் சிக்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் பல்லாவரம் தாசில்தார் தலைமையிலான குழுவினர் தகவல்களைச் சேகரித்து விசாரணை நடத்தி வரும் நிலையில், மாயமானவர்களை உடனடியாக மீட்டுத் தர வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உறவினர்கள் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Nellai | நெல்லையில் பெரும் பரபரப்பு - முத்துராமலிங்க தேவர் பீடத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

11th Students Cycle| 11th மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி - இத பார்த்ததும் சந்தோஷத்துலமிதக்க போறீங்க..!

Praggnanandhaa | "நான் அடிச்ச10 பேருமே டான் தான்" - வரலாறு படைத்தார் பிரக்ஞானந்தா

Nepal Flood | Death | உலகையே உறைய வைத்த நேபாளம் பேரழிவு.. பேரிடியாய் வந்த அடுத்த செய்தி

Nepal Disaster | TVK | CM Vijay |உலகையே உலுக்கிய நேபாள கொடூரம் - டெல்லியில் தவெக முக்கிய அமைச்சர்கள்