இந்தியா

உயர் அழுத்த மின்சாரம் தாக்கி 7 யானைகள் பலி : தொடரும் சோகம்

ஒடிசாவில் உள்ள தென்கானல் மாவட்டத்தில் உயர் அழுத்த மின்சாரம் தாக்கி ஏழு யானைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.

தந்தி டிவி

ஒடிசாவில் உள்ள தென்கானல் மாவட்டத்தில் உயர் அழுத்த மின்சாரம் தாக்கி ஏழு யானைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. கமலங்கா கிராமத்திற்கு அருகே உள்ள மின் வேலியை 13 யானைகள் கொண்ட காட்டு யானை கூட்டம் கடக்க முயன்றபோது, மின்சாரம் தாக்கியதில் 7 யானைகள் உயிரிழந்துள்ளன. ஒடிசாவில் கடந்த 18 ஆண்டுகளில் மட்டும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 170 க்கும் அதிகம் என தெரியவந்துள்ளது. யானைகளின் உயிரை பறிக்கும் மின் வேலிகளை குறித்து அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்