இந்தியா

குஜராத்தில் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது லாரி மோதி 7 பேர் உயிரிழப்பு

குஜராத்தில் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது லாரி மோதி 7 பேர் உயிரிழப்பு

thanthitv

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தேசிய நெடுஞ்சாலையில் பாதயாத்திரை சென்று கொண்டிருந்த பக்தர்களின் மீது லாரி மோதி 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜ்கோட்டில் உள்ள கோவிலுக்கு கிராமங்களில் இருந்து பக்தர்கள் சிலர் பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தனர்.

நெடுஞ்சாலையில் சென்றபோது, சாலையோரத்தில் டயர் மாற்றுவதற்காக நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் லாரியை பக்தர்கள் கடந்து செல்ல முயன்றனர்.

அந்தச் சமயத்தில், பின்னால் இருந்து வந்த மற்றொரு லாரி, சுமார் பத்து பேர் மீது மோதியது

இந்த கோர விபத்தில் 7 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்துக்குப் பிறகு ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகவும், அவரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தார்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பலியானவர்களின் ஆன்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெறவும் பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்