65 தேர்தல் பணியாளர்கள் வாக்குகள் நீக்கம் - ரிட் மனு தள்ளுபடி மேற்கு வங்கத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட 65 அலுவலர்களின் பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு, இந்த மனு விசாரணைக்கு வந்த போது, மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை நாடுமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தப்பட்டது. தற்போது நடைபெறும் தேர்தலில் அவர்கள் வாக்களிக்க முடியாது என்றாலும் எதிர்காலத்தில் பெயர் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.