உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோரில், மகனுடன் மருந்து வாங்கச் சென்ற பெண், எதிர்பாராத விதமாக கைவண்டியின் சக்கர அச்சில் சிக்கிய துப்பட்டாவால் கழுத்து இறுக்கப்பட்டு உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், பெண்ணின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து, விபத்து குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.