இந்தியா

5 மாநில தேர்தல் - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கார், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தலில் பணியாற்றும் தேர்தல் பார்வையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமை தாங்கினார். தேர்தல் ஆணையர்கள் அனுப் சந்திர பாண்டே மற்றும் அருண் கோயல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உரையாற்றிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், சுதந்திரமான, நியாயமான மற்றும் எந்த தூண்டுதலும் இல்லாத தேர்தலுக்கான சமநிலையை உறுதிப்படுத்த வேண்டும் என தேர்தல் பார்வையாளர்களுக்கு உத்தரவிட்டார். மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், பழங்குடியினர் உள்ளிட்டோர்ருக்கு எளிதான வாக்குச்சாவடி அணுகுமுறை போன்ற சிறப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும் என கேட்டு கொண்டார். கூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், வாக்காளர் பட்டியல் என்பது உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே