இந்தியா

ஒரே குடும்பத்தில் 5 பேர் விஷம் குடித்து த*கொலை

தந்தி டிவி

டெல்லி வசந்த் குஞ்ச் பகுதியில் தந்தை மற்றும் அவரது

நான்கு மகள்கள் உட்பட ஐந்து பேர் விஷம் அருந்தி

தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை

ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு அக்கம்பக்கத்தினர், அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக கொடுத்த தகவலை தொடர்ந்து, காவல்துறையினர் பூட்டை உடைத்து இறந்து கிடந்தவர்களின் சடனங்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவர்களுக்கு அருகில் செல்போஸ் என்கிற

மாத்திரை இருப்பதை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர். காவல்துறையினரின் முதற்கட்ட ஆய்வின்படி, தந்தை முதலில் தனது மகள்களுக்கு நச்சுத்தன்மை வாய்ந்த அந்த மாத்திரையை கொடுத்து, அதன் பிறகு தானும் அதனை உண்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறலாம் என தெரிவித்துள்ளனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர் கடைசியாக ]கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி, உயிரிழந்த தந்தை தனது வீட்டிற்குள் சென்று உள் பக்கமாக தாழிட்டு கொண்டது தெரியவந்துள்ளது. உயிரிழந்த நான்கு மகள்களில் ஒருவருக்கு கண் பார்வை இல்லை என்பதும் மற்ற 3 மகள்களும் நடக்க இயலாத மாற்றுத்திறனாளிகள் என்பதும் தெரிய வந்துள்ளது. உயிரிழந்த தந்தை தச்சு தொழிலாளி என்றும் அவரது மனைவி ஓர் ஆண்டுக்கு முன்பு புற்றுநோயால் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு