தமிழக போலீசார் அளித்த தகவலின் பேரில், கர்நாடகாவின் பெங்களூரு மற்றும் சாம்ராஜ்நகர் பகுதியில் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த 5 பேரை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளதாக அம்மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மாய் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகளும் பல்வேறு தகவல்களை மாநில அரசுக்கு அளித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு கைது நடவடிக்கைகள் தொடரும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.