Maharashtra Lady | Marathon | புடவை உடுத்தி வெறும் காலுடன் மாரத்தான் ஓடிய 47 வயது தாய் - கண் கலங்க வைத்த காரணம் மகாராஷ்டிராவில் மகள்களின் கல்விச் செலவுக்குப் பணமின்றி தவித்த 47 வயது தாய் ரமாபாய், எந்தப் பயிற்சியும் இன்றி, புடவை உடுத்தி வெறும் கால்களுடன் ஓடி மாரத்தான் போட்டியில் முதலிடம் பிடித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உணவகத்தில் சமையல் வேலை செய்து பிள்ளைகளை வளர்க்கும் இவர், போட்டியில் வென்ற 3,000 ரூபாய் பரிசுத் தொகையைக் கொண்டு மகள்களின் படிப்புக் கட்டணத்தைச் செலுத்த உள்ளதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
#Maharashtra #Marathon #OldLady #NationalNews #ThanthiTV