கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 529 பேர் உயிரிழந்தனர். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 67 ஆயிரத்து 334 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 54 லட்சத்து 96 ஆயிரத்து 330 ஆக உயர்ந்துள்ளது. 4 ஆயிரத்து 529 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த இறப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்து 83 ஆயிரத்து 248 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மூன்று லட்சத்து 89 ஆயிரத்து 851 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த நிலையில், 32 லட்சத்து 26 ஆயிரத்து 719பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 18 புள்ளி 58 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.